மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் நமது தமிழகத்தில் பாரம்பரியமாகவே கைக்கொள்ளப்பட்டு வருகிறது.எங்களது இந்தப் புதுமுயற்சியும் அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே.1970களின் துவக்கத்தில்,சென்னைச் சார்ந்த சில பட்டதாரி இளைஞர்கள் இணைந்து,ஒரு பதிப்பகத்தைத் துவங்கினார்கள்.அவர்கள் ஜனநாயக இயக்கங்களின் நடைமுறை தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணமும்,அந்த இயக்கங்களின் களப்பணியாளர்களின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணமும்,புத்தகங்களையும் பிரசுரங்களையும் தயாரித்துக் கொடுக்க முனைந்தார்கள. இந்தப் பதிப்பக முயற்சி பாட்டாளி வெளியீடு,சென்னைப் புக் ஹவுஸ்,சவுத் ஏசியன் புக்ஸ்,சவுத் விஷன் புக்ஸ் என பல நாம ரூபங்களை எடுத்ததாலும்,இவர்களது பதிப்பக முயற்சிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனுசரனையாக இருப்பது என்ற அடிப்படை அம்சத்தில் பற்றுதியுடன் நின்றது.
1990களில் புத்தகம் பதிப்பிக்கும் பணி பெரும் சவாலை உலகளவில் சந்தித்தது. விலைவாசி உயர்வால், புத்தகங்களின் விலைகளும் ஏற, பதிப்புத் துறையில் விஸ்தரித்து கொண்டு வளர்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது.இந்தப் பிரச்சினையை எஞ்சி நின்று எதிர்கொள்ள, இவர்கள் மக்கள் பதிப்பக முறையைக் கண்டுபிடித்தார்கள்.மக்கள் பதிப்பக முறையின் மூலம்,முற்போக்கு இலக்கியங்கள் தமிழில் சமூகத்தின் அனைத்துத் தட்டு மக்களுக்கும் கிடைக்க ஒருவழி ஏற்படுத்தப் பட்டடது.அவர்கள் மேலும் வலுவாகவும்,பரந்தும் பணி புரியவும் ஏற்படுத்தியதுதான் ‘சமூக அறிவியல் கூட்டிணைவு.’
இந்தச் சமூக அறிவியல் கூட்டிணைவு, ஒரு அறக்கட்டளை என்ற முறையில், ‘அறிவுப் பகர்வு’ பரவலாக மக்களிடம் சென்றடைவதற்காக முயற்சிகள் எடுப்பவர்களின் ஆற்றலை தக்க வைத்து, அதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக்க கொண்டும்,அனைத்துத் தரப்பட்ட தமிழ் மக்களுக்கும் முற்போக்கு இலக்கியங்கள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும் துவங்கப்பட்டது.
மொழிபெயர்ப்பு, பதிப்பு மற்றும் பிரசுரித்தல் போன்ற அனைத்து வகையான அறிவுபகிர்வு முயற்சிகளுக்கும், இந்த அறக்கட்டளை முன்முயற்சி எடுப்பதுடன்,ஆதரவும் தரும்.சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களை ஆற்றல் மிக்கவராக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும், இந்த அறக்கட்டளைத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன்,தங்களது பாதைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் தளையறுத்து விடுவிக்கும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போராளிகளுக்கு, விஷயதானத்தையும், அடிப்படைத் தரவுகளையும் தர முயற்சிக்கும்.
1970களில் இருந்து உள்ளூர படிந்திருக்கும் இப்பார்வைதான், தற்போதும் இந்த அறக்கட்டளையை முன்னெடுத்துச் செல்கிறது.இந்த அறக்கட்டளை தனது அனைத்து நடவடிக்கைகளின் மூலமும்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலனுக்காக நிற்கும். இந்த நோக்கத்திற்கு உதவி புரிய, ஆதரவு தர, பங்கேற்க வரும் அனைவரையும், அறக்கட்டளை கைக்கூப்பி வரவேற்பதுடன், இந்தக் கூட்டிணைவு சரியான முறையில் செயற்பட, உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டுகிறது.
வாழ்த்துக்கள்
என்னுடைய வலைப்பூவையும் உங்களின் இந்த வலைதளத்தில் ஒரு இணைப்புக்கொடுங்கள் தோழர்…. http://www.puduvairamji.blogspot.com
@Puduvai Ramji, Sorry for the delay in reply ,thanks for the link it was really very rich with contents , i have added that under blog section
தங்கள் முயற்சிகள் சிறப்புற வாழ்த்துகள்… என்னை போன்ற இளம் ஆய்வாளர்களையும் இணைத்துக்கொண்டால் மகிழ்ச்சி.
@பகத்சிங் , Thanks for your interest,we would sure want your contribution , please do post your thoughts to [email protected]
வாழ்த்தக்கள் !
தங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்…
என்னுடைய வலைப்பூவையும் இணைத்துக்
கொண்டமைக்கு மிக்க நன்றி….!
புதுவை ராம்ஜி..!
migachchirantha paniyinai aatri varugireergal. thangal pani sirakka enathu nalvaazhthukkal.
thoazhamaiyudan, ve.baa. athreya
Comrade
Thanks for your comment ,keep visiting and provide your comments .
Thanks
P.Ramprathap
அன்புடையீர், வணக்கம்.
தகுதியிருப்பின் கீழ்க்காணும் வலையகத்தின் தொடுப்பினைத் தங்களின் வலையகத்தில் LINKS என்னும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மார்க்சியச் சிந்தனை மையம்
மிக்கத் தோழமையுடன்,
மு.சிவலிங்கம்.
Very good website ..
Congrats